செய்திகள்

காஷ்மீர்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்

Published On 2017-08-28 11:32 GMT   |   Update On 2017-08-28 12:01 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டு
தப்பிச்சென்றனர்.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மெஹந்தி காடல் பகுதியில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஷீத் இன்று மதியம் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் அப்துல் ரஷீதை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரஷீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் புல்வாமா மாவட்ட காவல் தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News