செய்திகள்

ஆந்திர கவர்னருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2017-08-24 09:31 GMT   |   Update On 2017-08-24 09:31 GMT
ஆந்திர கவர்னர் நரசிம்மன் ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நகரி:

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு கவர்னராக இருப்பவர் நரசிம்மன். இவர் கால் ஆணி காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.

அதற்கு சிகிச்சை பெற முடிவு செய்த கவர்னர் நரசிம்மன் ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் கவர்னர் நரசிம்மன் சாதாரண நபர் போல் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் காயம் குறித்து விளக்கினார். அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சை அளித்து தோல் நோய் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றார்.

அந்த டாக்டர் ஆபரேசன் செய்து கொண்டு இருந்ததால் அவருக்காக கவர்னர் நரசிம்மன் காத்திருந்து அதன்பின் சிகிச்சை பெற்றார்.

நரசிம்மனுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதுபற்றி அவரிடம் கூறிய போது, தனக்கு நிறைய பணிகள் இருப்பதால் சில நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகவும் அதற்கான தேதியை தெரிவிப்பதாகவும் கூறினார்.
Tags:    

Similar News