செய்திகள்

பழங்குடியின தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்டார் அமித்ஷா

Published On 2017-08-20 15:38 GMT   |   Update On 2017-08-20 15:38 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பழங்குடியின தொண்டர் வீட்டில் மதிய உணவு உட்கொண்டார்.
போபால்:

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிடும், ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பயணம் மேற்கொண்டார். பயணத்தின் ஒரு பகுதியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த தொண்டர் கமல் சிங் வீட்டில் மதிய உணவு சாப்பிட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. 

தலைநகர் போபாலில் உள்ள செவனியா காட் பகுதியில் தொண்டர் கமல் சிங்கின் வீடு உள்ளது. மதிய உணவு தயாரிக்கும் பணியில் தொண்டரில் வீட்டில் உள்ளவர்கள் காலை முதலே மும்மரமாக இருந்தனர்.

அமித்ஷா உடன் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கட்சியின் மாநில தலைவர் நந்த்குமார் சவுகான் உள்ளிட்டோர் தொண்டரின் வீட்டில் மதிய உணவு உட்கொண்டனர்.

முன்னதாக மாநிலங்களில் மேற்கொண்டு தனது பயணத்தின் போது ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த தொண்டர்களின் வீடுகளில் உணவு அருந்தும் பழக்கத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
Tags:    

Similar News