செய்திகள்

வயல் வேலைக்கு வர மறுத்த தலித் பெண்ணின் மூக்கை கோடாரியால் வெட்டிய கொடூரம்

Published On 2017-08-18 06:49 GMT   |   Update On 2017-08-18 06:49 GMT
மத்தியப்பிரேதசம் மாநிலத்தில் வயல் வேலைக்கு வர மறுத்ததால் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணின் மூக்கை கோடாரியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:

மத்தியப்பிரேதசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராஸா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த  ஜானகி பாய்( வயது 35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் ராகவேந்தராவுடன் அக்கிராமத்தில் உள்ள நரேந்திர சிங்(32) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வேலை பார்த்து வந்தார். நரேந்திர சிங் மேல் வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை நரேந்திர சிங் ஜான்கி பாயை தனது நிலத்திற்கு பூச்சி மருந்து தெளிக்குமாறு அழைத்துள்ளார். அதற்கு ஜானகி மறுப்பு தெரிவித்ததால் நரேந்திர சிங் தனது தந்தை சகாப் சிங்குடன் இணைந்து ஜானகியை தாக்கியுள்ளார். இதை தடுத்த ஜானகியின் கணவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத குறித்து ஜானகி போலீசில் புகார் அளிக்க சென்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் தாக்குதல் நடத்தினர். அப்போது நரேந்திர சிங் கோடாரியால் ஜானகியின் முகத்தில் தாக்கினார். இதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை மத்தியப்பிரேதசம் மாநிலம் மகளிர் அமைப்பின் சார்பாக பெண்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமிற்கு சென்ற ஜானகி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பப்பட்டது.

குற்றவாளிகள் மீது சாதி வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை  முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.




Tags:    

Similar News