செய்திகள்

பெங்களூரு சிறையில் மகன் விவேக்கை சந்திக்க மறுத்த இளவரசி

Published On 2017-08-17 03:19 GMT   |   Update On 2017-08-17 03:19 GMT
பெங்களூரு சிறையிலுள்ள இளவரசியை பார்க்க அவருடைய மகன் விவேக் நேற்று அனுமதி கேட்டு மனு செய்தார். அப்போது, இளவரசி தனது மகனை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை, அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகன் விவேக் உள்பட பலர் சிறைக்கு சென்று அடிக்கடி சந்தித்து பேசி, நலம் விசாரித்தும் வருகிறார்கள். கடந்த 2-ந் தேதி டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், இளவரசியை பார்க்க அவருடைய மகன் விவேக் நேற்று அனுமதி கேட்டு மனு செய்தார். அப்போது, இளவரசி தனது மகனை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால், இளவரசியை பார்க்க சிறை வளாகத்துக்கு வந்த விவேக் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

இதுகுறித்து, விவேக் கூறுகையில், 18-ந் தேதி (நாளை) சசிகலாவின் பிறந்தநாள் வருகிறது. இந்த நாளில் சிறைக்கு வந்து அனைவரையும் பார்க்கும்படி இளவரசி அறிவுறுத்தியதாகவும், இதன் காரணமாக தற்போது பார்க்கவில்லை எனவும் கூறினார்.
Tags:    

Similar News