செய்திகள்

காஷ்மீரின் சோபியான் பகுதியில் துப்பாக்கிச் சண்டை - 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2017-08-13 06:18 GMT   |   Update On 2017-08-13 06:18 GMT
காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த இரு மாதங்களில் பலமுறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சோபியன் மாவட்டத்தின் ஜைனாபோரா பகுதியில் உள்ள அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

இதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இன்று காலை பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
முன்னதாக இந்த மோதலில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மூன்று வீரர்கள் படுக்காயமடைந்தனர்.
Tags:    

Similar News