செய்திகள்

ஜார்க்கண்ட் - பீகார் எல்லை பகுதியில் 15 பேரை தாக்கி கொன்ற யானை சுட்டுக் கொலை

Published On 2017-08-12 12:41 GMT   |   Update On 2017-08-12 12:41 GMT
ஜார்கண்ட் - பீகார் எல்லை பகுதியில் 15 பேரின் உயிரை பறித்த யானையை காட்டிலா அதிகாரிகள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சுட்டு கொன்றனர்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 25 வயது மதிக்கத்தக்க யானை கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. பல வீடுகளை தும்சம் செய்தது. மேலும் 11 பேர் யானை தாக்கியதால் பரிதாபமாக பலியாகினர்.

அதே போல் பீகார் மாநிலத்தில் 4 பேர் இந்த யானை தாக்கி மரணமடைந்தனர். இதன் காரணமாக யானையை சுட்டு கொல்ல ஜார்க்கண்ட் மாநில அரசு காட்டிலாகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வன அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி சுடுபவர்கள் இணைந்து யானையை கொல்ல முயற்சி செய்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் யானையை சுட்டு கொன்றனர்.

இதுகுறித்து துப்பாக்கி சுடுபவரான ஷபாத் அலி கான் பேசுகையில், முதலில் யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஆனால் யானை மயக்கமடையவில்லை. அதன் பின் துப்பாக்கியால் சுட்டதில் யானை உயிரிழந்தது என கூறினார்.

மேலும் இறந்த யானையின் உடலை காட்டின் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்போவதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News