செய்திகள்

உத்தரபிரதேசம்: பிரபல மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி

Published On 2017-08-11 15:01 GMT   |   Update On 2017-08-12 03:24 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என மாவட்ட கலெக்டர் ராஜீவ் ராவுத்லே கூறியுள்ளார். 

ஆக்ஸிஜன் பற்றாக்குறை பணம் செலுத்தாதால் ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கோரக்பூர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கும் பிஆர்டி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனுக்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படாததால் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது. 

கோரக்பூர் தொகுதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாகும். 
Tags:    

Similar News