செய்திகள்

மத்திய அரசின் அடுத்த ‘ஆதார் ஆபரேஷன்’: இறப்பு விபரங்களை பதிவு செய்யவும் ‘அது’ வேண்டுமாம்

Published On 2017-08-04 11:55 GMT   |   Update On 2017-08-04 11:55 GMT
மக்களின் இறப்பு விபரங்களை பதிவு செய்ய வரும் அக்டோபர் மாதம் முதல் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

உலகில் மனிதர்கள் உயிர்வாழ காற்று, நீர், சூரிய ஓளி ஆகியவை அத்தியாவசியமோ, அப்படி இந்தியாவில் குடிமகனாக இருக்க ஆதார் அட்டை அத்தியாவசியம். எரிவாயு, உரம் உள்ளிட்ட அரசின் மானியத்தொகையை, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு பெறுவதிலிருந்து அவசர தேவைக்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் காட்டு கத்தல் கத்தினாலும், காதில் போட்டுக்கொள்ளாத மத்திய அரசு அடுத்து எதில் ஆதாரை புகுத்தலாம் என மேலும், மேலும் யோசித்து வருகிறது.
இந்நிலையில், குடிமக்களின் இறப்பு விபரங்களை பதிவு செய்ய வரும் அக்டோபர் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் போலியாக இறப்பு சான்றிதல் பெற்று அதன் மூலம் சில பலன்களை அனுபவித்து வருபவர்கள் தடுக்கப்படுவார்கள் என அரசு விளக்கமளித்துள்ளது.
Tags:    

Similar News