செய்திகள்

டெல்லியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 62 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு

Published On 2017-07-27 16:19 GMT   |   Update On 2017-07-27 16:19 GMT
தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 62 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு உள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 35.7 சதவீதம் பேர் குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர். இதேபோல், 38.4 சதவீதம் பேர் போதிய வளர்ச்சியின்மையாலும், இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகை எனப்படும் அனிமியா நோயால் 58.4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 62.6 சதவீதம் பேர் ரத்த சோகை எனப்படும் அனிமியாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது சமீபத்தில் நடத்திய சர்வே மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News