செய்திகள்

மகராஷ்டிரா: பணபறிப்பு வழக்கில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. போலீசில் சரணடைந்தார்

Published On 2017-07-25 05:36 GMT   |   Update On 2017-07-25 05:37 GMT
பணபறிப்பு வழக்கில் குற்றங்சாட்டப்பட்ட மகராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் எம்.பி. உதயராஜே போஸ்லே போலீசில் சரணடைந்துள்ளார்.

மும்பை:

மகராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் உதயராஜே போஸ்லே. இவர் அம்மாநிலத்தின் சதாரா மக்களவைத் தோகுதி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் மனோகர் ஜோஷி தலைமையிலான மந்திரிசபையில் மாநில வருவாய்துறை மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், சதாரா பகுதியை சேர்ந்த சோனா அலாய்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெயின் என்பவர் கடந்த மார்ச் மாதம் உதயராஜே போஸ்லே மீது சதாரா போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் எம்.பி. உதயராஜே போஸ்லேவின் ஆதரவாளர்கள் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டிவருகின்றனர் என அதில் கூறியிருந்தார். 

அதைத்தொடர்ந்து, சதாரா போலீசார் உதயராஜே போஸ்லே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் எம்.பி. உதயராஜே போஸ்லே சதாரா போலீஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

Tags:    

Similar News