செய்திகள்

டி.ஐ.ஜி. ரூபா மேலும் ஒரு அறிக்கை தயாரிப்பு

Published On 2017-07-15 09:04 GMT   |   Update On 2017-07-15 09:04 GMT
பெங்களூர் சிறையில் சசிகலா பணம் கொடுத்து பெற்றுள்ள மேலும் சில சலுகைகள் பற்றி, டி.ஐ.ஜி. ரூபா இன்று ஒரு அறிக்கையை வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்:

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.



இது கர்நாடக மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் சிறையில் நடக்கும் தில்லுமுல்லுகள், விதிமீறல்கள் பற்றி டி.ஐ.ஜி. ரூபா மேலும் ஒரு அறிக்கையை தயார் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதில் அவர் சசிகலா பணம் கொடுத்து பெற்றுள்ள மேலும் சில சலுகைகள் பற்றி விபரமாக தொகுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கையை அவர் இன்று வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி.ஐ.ஜி. ரூபாவின் இரண்டாவது அறிக்கையில், லஞ்சம் கொடுத்தவர்கள், பெற்றவர்கள் பெற்றவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளதாம். எனவே சிறைத்துறை உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா இனி எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது. எந்த ஊடகத்துக்கும் பேட்டி அளிக்கவும் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

இதனால் டி.ஐ.ஜி. ரூபாவின் இரண்டாவது அறிக்கை வெளியாகுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Tags:    

Similar News