செய்திகள்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில்லரை பண புழக்கம் வீழ்ச்சி

Published On 2017-07-13 09:49 GMT   |   Update On 2017-07-13 09:49 GMT
கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் நாடு முழுவதும் பணப்புழக்கம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகளும், தொழில் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பண புழக்கம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாய உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கிய சில்லறை வர்த்தக பொருட்களின் பண வீக்க விகிதம் 1.54 சதவீதமாக உள்ளது. அதாவது இவற்றின் விலை வழக்கமான சராசரியை விட குறைந்து இருக்கிறது.

கடந்த 18 ஆண்டில் இல்லாத அளவுக்கு இவற்றின் பண வீக்க விகிதம் இப்போது குறைந்துள்ளது. மக்களின் தேவைக்கும் அதிகமாக நாடு முழுவதும் விவசாய பொருட்கள் உற்பத்தி இருப்பதால் இந்த விலை விகிதம் குறைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் உற்பத்தி செலவை விட குறைவான விலைக்கு பொருட்களை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது, அவர்களை கடும் நஷ்டத்தில் தள்ளி உள்ளது. இதன் காரணமாகத்தான் விவசாயிகள் நாடு முழு வதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.



கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் நாடு முழுவதும் பணப்புழக்கம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விதைகள், உரம் மற்றும் தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாமல் விவசாயிகள் தவித்தனர்.

தொழிற்சாலை இது மட்டும் அல்ல, தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி விகிதமும் இந்த ஆண்டு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதன் வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. தற்போது இதன் வளர்ச்சி 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக மூலதன பொருட்கள், ஆட்டோ மொபைல் உற்பத்தி பொருட்கள், ஜவுளி தொழில் போன்றவற்றின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இவற்றை முக்கியத்துவம் கொடுத்து சீரமைக்காவிட்டால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று தொழில் கூட்டமைப்பு செயலாளர் திதர்சிங் கூறியுள்ளார்.

பண வீக்கத்தை பொருத்தவரை அதில் 49 சதவீதம் உணவு பொருட்களின் பங்கு ஆகும். இவற்றின் விலை தொடர்ந்து குறைந்தபடி உள்ளது. காய்கறிகளின் விலை கடந்த மாதங்களுக்கு இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறது. அதே போல் பருப்பு தானியங்களின் விலை 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் 2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை இருந்தால் அதனால் பாதிப்பு ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆனால், அதற்கும் கீழ் குறைந்தால் இது பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.



ஜி.எஸ்.டி. வரி தற்போது ஜி.எஸ்.டி. வரி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பொருளாதார ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக நிபுணர் ஒருவர் கூறி இருக்கிறார்.

இன்றைய சூழ்நிலையில் சிறு பொருளாதார நட வடிக்கைகளில் நிலையற்ற தன்மை இருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tags:    

Similar News