செய்திகள்

ஆந்திராவில் ரூ.500 கோடி சொத்து வாங்கி குவித்த அரசு என்ஜினீயர்: லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கினார்

Published On 2017-06-24 05:48 GMT   |   Update On 2017-06-24 05:48 GMT
ஆந்திராவில் அரசு என்ஜினீயர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் நகைகள், வெள்ளி பொருட்கள், அமெரிக்க டாலர்கள், முதலீடு பத்திரங்கள் சிக்கின. இதன் மதிப்பு சுமார் ரு.500 கோடி ஆகும்.

நகரி:

ஆந்திராவில் மாநில சுகாதார துறையில் தலைமை என்ஜினீயராக வேலை பார்த்து வருபவர் பாண்டு ரெங்காராவ், இவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிகாலை பாண்டு ரெங்காரெட்டி வீடுகள், அவரது உறவினர் , நண்பர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான பணம், சொத்து ஆவணங்கள், நகைகள், வெள்ளி பொருட்கள், அமெரிக்க டாலர்கள், முதலீடு பத்திரங்கள் சிக்கின. இதன் மதிப்பு சுமார் ரு.500 கோடி ஆகும்.

இச்சோதனை குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்தது. அரசு அதிகாரி ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News