செய்திகள்

ஒத்திவைக்க வாய்ப்பில்லை - ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நிச்சயம் ஜி.எஸ்.டி. அமல்: அருண் ஜெட்லி உறுதி

Published On 2017-06-18 13:12 GMT   |   Update On 2017-06-18 13:12 GMT
ஒத்தி வைப்பதற்கு போதுமான நேரமில்லை, ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு திட்டமிட்டபடி அதிகாரப்பூர்வமாக ஜி.எஸ்.டி. அமல் ஆகும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜி.எஸ்.டி சட்டம் குறித்த 17-வது கவுன்சில் கூட்டம் நிதிமந்திரி அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடைபெற்றது. புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லாட்டரி, ஹோட்டல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அருண் ஜெட்லி கூறியதாவது:-

அரசு நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும். அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்க உள்ளது.

ஆடம்பர நட்சத்திர ஹோட்டல்களுக்கு 28 சதவீதம் வரியும், அதற்கு குறைவான தரத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படும்.

ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி அதிகாரப்பூர்வமாக அமல் ஆகும். ஜூலை ஒன்றாம் தேதி அதற்கான தொடக்கவிழா நடைபெறும். ஒத்தி வைத்து செயல்படுத்தும் அளவிற்கு அதிக அளவில் நம்மிடம் நேரம் இல்லை.

இவ்வாறு தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என நான்கு விதமான வரிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News