செய்திகள்

ஜம்மு-காஷ்மீரை காப்பாற்ற, கவர்னர் ஆட்சி கொண்டு வாருங்கள்: ஃபரூக் அப்துல்லா

Published On 2017-05-28 13:25 GMT   |   Update On 2017-05-28 13:26 GMT
ஜம்மு-காஷ்மீர் காப்பாற்றப்பட வேண்டுமானால், கவர்னர் ஆட்சியை அமல்படுத்துங்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர் வன்முறை காரணமாக கடந்த பல மாதங்களாக அமைதியின்மை நிலவி வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மொதல் தொடர் கதையாகிவிட்டது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் காப்பாற்றப்பட வேண்டுமானால், கவர்னர் ஆட்சியை அமல்படுத்துங்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். 

மேலும், ”கவர்னர் ஆட்சியை ஒருபோது நாங்கள் ஆதரித்து வந்ததில்லை. எப்போதும் அதனை எதிர்த்து இருக்கிறோம். ஆனால் வகுப்பு வாத வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியில்லை” என்றார். 

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து கூறுகையில், “பிரதமர் மோடியுடன் நான் என்ன பேசினேன் என்பதை என்னால் சொல்ல முடியாது. தற்போதையை சூழ்நிலை குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். அமைதியான வழியில் முடிவு எட்ட வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News