செய்திகள்

உ.பி.யில் நர்ஸ் மாணவி கற்பழிப்பு - அமைதி கட்சி தலைவர் கைது

Published On 2017-05-24 05:27 GMT   |   Update On 2017-05-24 08:43 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் 22 வயது நர்ஸ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அமைதி கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் இயங்கி வரும் அமைதி கட்சியின் தலைவர் முகமது அயுப். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அமைதி கட்சியின் தலைவர் முகமது அயுப் நர்ஸ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட நர்ஸ் மாணவி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள தனியார் பல்கலைக் கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு முகமது அயுப் சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அவர் உயிரிழந்து விட்டார். 

மாணவியின் மரணத்தில் சந்தேகம் அவரது சகோதரர் மடியோன் காவல்நிலையத்தில் அயுப் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், “அயுப் அளித்த தவறான மருத்துகளாகவும் தான் என்னுடைய சகோதரி உயிரிழந்தார். மேலும், சிகிச்சையின் போது என்னுடைய சகோதரியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

பிப்ரவரி 25-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அமைதி கட்சியின் தலைவரும், மருத்துவருமான அயுப் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News