செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சரத்பவார் மறுப்பு

Published On 2017-05-19 02:45 GMT   |   Update On 2017-05-19 02:45 GMT
சோனியா காந்தி, சரத்பவாரை எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும்படி கூறியதாகவும், ஆனால் சரத்பவார் தனக்கு போட்டியிடுவதில் ஆர்வம் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை :

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்துவருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தி, சரத்பவாரை எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும்படி கூறியதாகவும், ஆனால் சரத்பவார் தனக்கு போட்டியிடுவதில் ஆர்வம் இல்லை என்றும், வேறு யாராவது ஒருவரை பரிசீலனை செய்யுங்கள் என்றும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் இதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சரத்பவார், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிபெற தேவையான அளவு ஓட்டுகள் உள்ளது. எனவே ஜனாதிபதி தேர்தலில் எந்த ஆச்சரியமும் நிகழப்போவதில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News