செய்திகள்

பிரதமர் மோடி, சுஷ்மா உடன் ரஷ்யா துணை பிரதமர் டிமிட்ரி சந்திப்பு

Published On 2017-05-10 11:13 GMT   |   Update On 2017-05-10 11:13 GMT
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
புதுடெல்லி:

ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் ஒரு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது பயணத்தின் முக்கிய பகுதியாக வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை டிமிட்ரி இன்று சந்தித்தார். 



சந்திப்புக்கு பிறகு ரஷ்ய துணை பிரதமர் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய சுஷ்மா, “ரஷ்யா உடனான உறவு இந்திய வெளியுறவுக் கொள்கையின் வலிமையான தூண்களில் ஒன்று. இந்திய-ரஷ்யா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜூன் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல உள்ளார்.

உள்நாட்டு அணுசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்து செல்வது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்றார்.



பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை டிமிட்ரி ரோகோஜின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன், டிமிட்ரி ரோகோஜின் இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்தாலோசனை செய்தார்.
Tags:    

Similar News