செய்திகள்

ஆந்திராவில் 114 டிகிரி வெயில் கொளுத்துகிறது: ஒரே நாளில் 20 பேர் பலி

Published On 2017-04-24 05:07 GMT   |   Update On 2017-04-24 05:07 GMT
வெயில் கொடுமைக்கு ஆந்திரா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெயில் உள்ளது.

நகரி:

கோடை காலம் தொடங்கும் முன்பே ஆந்திராவை வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெயில் உள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் நேற்று அதிக பட்சமாக 113.9 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் அனல் காற்று வீசியது. வெயிலை தாங்க முடியாமல் பொது மக்கள் அவதிக்குள்ளானார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இதேபோல் நெல்லூரில் 109.4 டிகிரி வெயிலும், திருப்பதியில் 110.66 டிகிரி வெயிலும் கொளுத்தியது.

வெயில் கொடுமைக்கு ஆந்திரா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

Similar News