செய்திகள்

வாஷிங்டனுக்கு நேரடி விமான போக்குவரத்து: ஏர் இந்தியா புது அறிவிப்பு

Published On 2017-03-29 22:24 GMT   |   Update On 2017-03-29 22:24 GMT
வரும் ஜூன் மாதம் முதல் புதுடெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு நேரடியான இடைவிடா விமான போக்குவரத்து தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட இடங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து இருந்து வருகிறது. 

இந்நிலையில், புதுடெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு நேரடியான இடைவிடா விமான போக்குவரத்து தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் இதற்கான விமான போக்குவரத்து தொடங்குகிறது. 

டெல்லி-வாஷிங்டன் விமானம் வாரத்தில் மூன்று முறை பயணிக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக முன் பதிவு கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நான்கில் ஒரு பங்கு இருக்கைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

80 இருக்கைகள் இதுவரை முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 238 இருக்கைகள் உள்ள B777-200 விமானத்தில் முதல் வகுப்பில் 8 இருக்கைகள், வர்த்தக பிரிவில் 35 இருக்கைகள் மற்றும் எக்னாமிக் பிரிவில் 195 இருக்கைகள் உள்ளன.

இந்தியாவில் இருந்து நேரடியான விமான போக்குவரத்து உள்ள அமெரிக்காவின் 5-வது நகரம் வாஷிங்டன் ஆகும். இதற்கு முன்பாக சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், நியர்க் மற்றும் சிக்காகோவிற்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளது. 


Similar News