செய்திகள்

ஆம் ஆத்மியிடம் ரூ.97 கோடியை வசூலிக்க வேண்டும்: டெல்லி கவர்னர் உத்தரவு

Published On 2017-03-29 18:49 GMT   |   Update On 2017-03-29 19:25 GMT
அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தி விளம்பர செலவு செய்த ஆம் ஆத்மியிடம் ரூ.97 கோடியை வசூலிக்க வேண்டும் என டெல்லி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்
புதுடெல்லி:

அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும், அவரது ஆம் ஆத்மி கட்சியையும் முன்னிலைப்படுத்தி டெல்லி மாநில அரசு செலவில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களால் ரூ.97 கோடி செலவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த தொகையை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஒரு மாதத்துக்குள் திரும்ப வசூலிக்குமாறு டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் எம்.எம்.குட்டிக்கு அம்மாநில கவர்னர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார். இந்த விளம்பர செலவு குறித்து விசாரணை நடத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு அமைத்த 3 பேர் குழு ஒன்று, விளம்பர செலவுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் அரசை சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியது. தணிக்கை குழுவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News