செய்திகள்

காஷ்மீரில் பனிச்சரிவு - சுற்றுலா பயணிகள் 71 பேர் மீட்பு

Published On 2017-03-28 21:50 GMT   |   Update On 2017-03-28 21:50 GMT
காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்திய பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு சிக்கிய 21 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட சுற்றுலா பணிகள் 71 பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்திய பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு உள்ள சாங் லா மற்றும் டாங்டெஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் பலர் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராணுவ மீட்புக்குழு அங்கு விரைந்து சென்று தீவிர மீட்புபணியில் இறங்கியது. நேற்று காலையில் 21 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட சுற்றுலா பணிகள் 71 பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு, உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Similar News