செய்திகள்

மலப்புரம் மக்களவைத் தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டி

Published On 2017-03-27 15:30 GMT   |   Update On 2017-03-27 15:30 GMT
கேரள மாநிலம் மலப்புரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மலப்புரம்:

கேரள மாநிலம் மலப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யான முன்னாள் மத்திய மந்திரி இ.அகமது பிப்ரவரி மாதம் காலமானதையடுத்து அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஸ்ரீ பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்திய யூனியன் முஸ்லிம்லீக் பொதுச்செயலாளர் குன்ஹாலிகுட்டி ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் டி.ஒய்.எப்.எல். தலைவர் எம்.டி.பைசல் மனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் மூன்று கூட்டணிகளின் வேட்பாளர்கள், 6 சுயேட்சைகள் என மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News