செய்திகள்

ரூ1.35 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக மூன்று பேர் கைது

Published On 2017-03-20 18:42 GMT   |   Update On 2017-03-20 18:42 GMT
தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 1.35 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருந்ததாக கூறி மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 1.35 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருந்ததாக கூறி மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு ஒருமாத கால இடைவெளியில் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. அதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடிவும் என அரசு அறிவித்தது.

பிப்ரவரி மாதம் முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் 1,35,80,000 அளவில் வைத்திருந்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழைய நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்த பின்னர் இவ்வளவு அதிகமான தொகை பிடிபட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News