செய்திகள்

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் எவ்வளவு? - டெல்லியில் 23-ம் தேதி உயர்நிலைக் கூட்டம்

Published On 2017-03-20 13:34 GMT   |   Update On 2017-03-20 13:34 GMT
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து டெல்லியில் 23-ம்தேதி நடைபெறும் உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு டெல்லியில் 23-ம்தேதி  உயர்நிலைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி  ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராதாமோகன சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதற்கிடையே, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் இன்று மாலை சந்தித்து பேசினார்.

Similar News