செய்திகள்

பெங்களூருவில் இருந்து தெலுங்கானாவுக்கு பஸ் வசதி

Published On 2017-03-18 05:00 GMT   |   Update On 2017-03-18 05:00 GMT
பெங்களூருவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பெங்களூரு:

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தெலுங்கானா மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இதற்காக அந்த மாநில போக்குவரத்துதுறை அதிகாரிகள் பெங்களூர் வந்து பெங்களூரு மாநகராட்சி போக்குவரத்து கழக தலைவர் நாகராஜ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

மேலும் பெங்களூரு நகரில் இயக்கப்படும் டவுன் பஸ்களைபோல தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களில் இயக்குவது குறித்த ஆலோசனையையும் தெலுங்கானா அதிகாரிகள் பெங்களூரு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Similar News