செய்திகள்

3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

Published On 2017-03-10 01:00 GMT   |   Update On 2017-03-10 01:00 GMT
நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில், ஏப்ரல் 9 மற்றும் 12-ந் தேதிகளில் 2 கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறும். அங்கு ஏப்ரல் 15-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

கேரள மாநிலம் மலப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 17-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

டெல்லி, அசாம், இமாசலபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். சிக்கிம் மாநிலத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதியில் ஏப்ரல் 12-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்று, ஏப்ரல் 15-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.

இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 

Similar News