செய்திகள்

உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரம்: இன்று வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2017-03-04 01:10 GMT   |   Update On 2017-03-04 01:10 GMT
உத்தரப்பிரதேச தேர்தலின் இறுதி கட்டத் தேர்தலை ஒட்டி, பிரசாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.
வாரணாசி:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் இறுதிகட்ட  வாக்குப்பதிவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக மோடியின்  மக்களவை தொகுதியான வாரணாசியில் பிரசார பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று காலை 9 மணியளவில் வாரணாசி செல்லும்  மோடி முதலில் காசி விஸ்வநாதர் மற்றும் கால பைரவர் கோவிலுக்கு சென்று பிரார்த்தணை செய்கிறார்.



கோவில்களில் பிரார்த்தணை முடித்த பிறகு ஜான்பூர் தொகுதியில் பிரசார பேரணியில் கலந்து கொள்ளும் மோடி, மாலை தனது  மக்களவை தொகுதியான வாரணாசியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர்  பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற உள்ள பிரசார கூட்டத்திலும் மோடி உரையாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தல் வரும் 8-ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி, வாக்குப்பதிவு  நடைபெறும் சட்டசபை தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News