செய்திகள்

சமாஜ்வாடியில் பெண்களுக்கு மரியாதை இல்லை: நடிகை ஜெயபிரதா

Published On 2017-02-28 06:39 GMT   |   Update On 2017-02-28 06:39 GMT
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று நடிகை ஜெயபிரதா தெரிவித்தார்.
நகரி:

பிரபல நடிகை ஜெயபிரதா. ரஜினி, கமல் உள்ளிட்ட தெலுங்கு, இந்தி முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர். அவர் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து எம்.பி. ஆனார். அவரை அமர்சிங் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியில் அமர்சிங் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளரான ஜெயபிரதாவும் வெளியேறினார்.


                                                  அமர் சிங், ஜெய பிரதா

சீரடியில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜெயபிரதாவிடம் நிருபர்கள், சமாஜ்வாடி கட்சியில் மீண்டும் சேருவீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறுகையில், சமாஜ்வாடியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. அக்கட்சியில் மீண்டும் சேரவே மாட்டேன். உத்தரபிரதேசத்தில் குண்டர்கள் ஆட்சி நடக்கிறது.

பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. மோடியின் 500, 1000 ரூபாய் மதிப்பிழப்பு முடிவு சரியானது. அது தைரியமான முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News