செய்திகள்

ஓலா, உபேருக்குப் போட்டியாக கால் டாக்சி தொழிலில் களமிறங்கும் ஜியோ

Published On 2017-02-25 13:28 GMT   |   Update On 2017-02-25 13:28 GMT
ஓலா, உபேர் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக கால் டாக்சி தொழிலில் ஜியோ நிறுவனம் களமிறங்கவுள்ளது.
புது டெல்லி:

ஜியோ என்னும் பெயரில் தொலைத்தொடர்பு துறையில் கால்பதித்த முகேஷ் அம்பானி அடுத்ததாக கால் டாக்சி தொழில் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். இதற்காக சுமார் 600 கார்களை ஹூண்டாய் மற்றும் மகேந்திரா நிறுவனங்களிலிருந்து ஜியோ வாங்கியுள்ளது.

தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக ஜியோ கால்டாக்சி நிறுவனம் தொடங்கப்படவுள்ளது. இலவச 4 ஜி சேவை, குறைந்த கட்டணம் ஆகியவற்றுடன் களமிறங்கும் ஜியோ கால்டாக்சி சக நிறுவனங்களான ஓலா, உபேர் ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதுகுறித்த அறிவிப்பை முகேஷ் அம்பானி இந்த ஆண்டின் (2017) இறுதியில் வெளியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோ வருகையால் ஏர்டெல், வோடபோன் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ள நிலையில், கால் டாக்சி தொழிலும் ஜியோ கால் பதிப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News