செய்திகள்

காஷ்மீரில் ராணுவ தாக்குதலில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் பலி

Published On 2017-02-20 00:34 GMT   |   Update On 2017-02-20 00:34 GMT
காஷ்மீரில் எல்லைப்பகுதியில் இந்த ஆண்டில் கடந்த 50 நாட்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் எல்லைப்பகுதியில் அவ்வப்போது பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இந்த ஆண்டில் (2017) கடந்த 50 நாட்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த தாக்குதல்களில் இந்த நாட்களில் தான் அதிக அளவில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 26 வீரர்கள் இதுவரை இறந்து உள்ளனர். இதில் பாதுகாப்பு பணியின்போது பனிச்சரிவில் சிக்கி அதிகாரி உள்பட 20 வீரர்கள் உயிரிழந்ததும் அடங்கும்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்ஹான் வானி கடந்த ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

Similar News