செய்திகள்

தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க. கூட்டணிக்கு 360 இடங்கள் கிடைக்கும்

Published On 2017-01-27 01:21 GMT   |   Update On 2017-01-27 01:21 GMT
தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றி பெறும் என்றும் மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்தமானவர் என்றும் கருத்துக் கணிப்பு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது.

ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் பா.ஜ.க. அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே மற்றும் கர்வி இன்சைட்ஸ் எம்.ஓ.டி.என் சார்பில் இந்த அரசியல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.

கருத்துக் கணிப்பில் சில முக்கிய அம்சங்கள்:-

மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்தமானவர் என்று 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியாவில் பதவி வகித்துள்ள பிரதமர்களிலே மோடி தான் சிறந்த பிரதமர்.

பண மதிப்பிழக்க நடவடிக்கையை 80 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். 51 சதவீதம் பேர் பண மதிப்பிழக்க நடவடிக்கையால் பலனை விட வலியே அதிகம் என்று கூறியுள்ளனர்.

ராகுல்காந்திக்கு 10 சதவீதம் ஓட்டுகளே கிடைக்கும். மூன்றாவது அணியை வழிநடத்த அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்தவர் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News