செய்திகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: 3 நாள் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி

Published On 2017-01-26 22:07 GMT   |   Update On 2017-01-26 22:07 GMT
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது 3 நாள் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார்.
அமிர்தசரஸ்:

117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில்  இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தற்போது ஷிரோன்மணி அகாலி தளம் - பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் அகாலி தளம் - பாஜ கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது 3 நாள் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் மஜிதா பகுதியில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் இன்று கலந்து கொள்கிறார். அதனையடுத்து, முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலின் லம்பி தொகுதி, துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் ஜலலாபாத் தொகுதி ஆகியவற்றில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மற்றொரு மாநிலமான கோவாவிற்கு ஜனவரி 30-ம் தேதி செல்ல திட்டமிட்டுள்ளார்.

Similar News