செய்திகள்

அடுத்த சிபிஐ இயக்குனராக டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் வெர்மா நியமனம்

Published On 2017-01-19 15:52 GMT   |   Update On 2017-01-19 15:52 GMT
டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் வெர்மா அடுத்த சிபிஐ இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

சிபிஐ இயக்குனராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2ம் தேதி ஓய்வு பெற்றார். அதனையடுத்து, புதிய இடைக்கால இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டு இருந்தார். 

பின்னர், புதிய நிரந்தர இயக்குனரை நியமிப்பதற்கான பிரதமர் மோடி தலைமையிலான குழு கூடி ஆலோசனை நடத்த தாமதம் ஆனதால் புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்படவில்லை. 

இந்நிலையில், டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் வெர்மா அடுத்த சிபிஐ இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு வெர்மா சிபிஐ இயக்குனராக பதவி வகிப்பார்.

அலோக் வெர்மா நியமனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்கு 45 ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட பட்டியல் பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது.

1979-ம் ஆண்டு இந்திய காவல்துறை பணியில் சேர்ந்த அலோக் வெர்ம கடந்த 11 மாதங்களால டெல்லி கமிஷனராக பதவி வகித்து வருகிறார்.

வெர்மாவின் பணிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இருப்பினும் மத்திய அரசு அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News