செய்திகள்

கிரிக்கெட் பந்து அபாயகரமானது என்பதால் கிரிக்கெட்டைத் தடை செய்வீர்களா?-சத்குரு ஜக்கி வாசுதேவ்

Published On 2017-01-19 11:52 GMT   |   Update On 2017-01-19 11:52 GMT
கிரிக்கெட் பந்து அபாயகரமானது என்பதால் கிரிக்கெட்டைத் தடை செய்வீர்களா? என ஈஷா அறக்கட்டளை சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய்ப்பூர்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். எனினும் இந்த சந்திப்பின் மூலம் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

அவசர சட்டம் இயற்றப்படாத வரையில் தங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கெட்டைத் தடை செய்வீர்களா? என ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசும்போது, 'கிரிக்கெட் பந்து ஆபத்தானது. இதனால் பல வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் கிரிக்கெட்டைத் தடை செய்வீர்களா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Similar News