செய்திகள்

1 ரூபாய்க்கு விற்பனை: 70 லோடு தக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயிகள்

Published On 2016-12-26 13:07 GMT   |   Update On 2016-12-26 13:07 GMT
தக்காளி விலை கிலோ வெறும் 1 ரூபாய்க்கே சென்றதால் விரக்தியில் 70 லோடு தக்காளியை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தீஷ்கர் மாநிலம் டர்க் பகுதியில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி செடிகளை பயிரிட்டிருந்தனர். விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அமோக விளைச்சல் ஏற்பட்டது.

ஆனால் சந்தையில் அதற்கான விலை விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை. வெறும் ஒரு ரூபாய்க்கே வியாபாரிகள் கேட்டனர். ஒரு ரூபாய் எதற்கும் பயன்படாத என்பதால் விரக்தியடைந்த விவசாயிகள் 70 லோடு தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தக்காளிக்கு ஒரு நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Similar News