செய்திகள்

வோடபோன் கட்டணங்கள் பாதியாக குறைப்பு

Published On 2016-12-08 13:35 GMT   |   Update On 2016-12-08 13:35 GMT
வோடபோன் மொபைல் பிராட்பேன்ட் திட்டங்களின் சேவை கட்டணங்கள் அனைத்தும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து வோடபோன் நிறுவனம் தனது 4ஜி டேட்டா திட்டங்களின் விலையை பாதியாக குறைத்துள்ளது. எனினும் இவை ரூ.255 மற்றும் அதற்கும் அதிகமான விலை கொண்டவற்றிற்கு மட்டுமே பொருந்தும்.

‘‘அனைத்து வோடபோன் 4ஜி பிரீபெயிட் வாடிக்கையாளர்களும் 'டபுள் டேட்டா' சலுகைகளை பெற முடியும். இச்சலுகைகளை ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் திட்டங்களிலும் புதிய வோடபோன் பயனர்கள் மேம்படுத்தப்பட்ட மொபைல் இண்டர்நெட் சேவையினை பெற முடியும் என்றும் இந்த சிறப்பு சலுகைகள் ரூ.255 முதல் துவங்கும் திட்டங்களுக்கு பொருந்தும்’’ என வோடபோன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வோடபோன் பயனர்கள் 2GB அளவு 4ஜி டேட்டாவினை ரூ.255/- செலுத்தி பயன்படுத்த முடியும். முன்னதாக ரூ.255/- செலுத்தும்போது 1GB அளவு டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. இதேபோல் ரூ.459 செலுத்தும் போது 6GB 4ஜி டேட்டாவும், ரூ.559 செலுத்தும் போது 8GB டேட்டாவும், ரூ.999 செலுத்தும் போது 20GB மற்றும் ரூ.1999 செலுத்தும் போது 40 GB அளவு டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 

ரிலையன்ஸ் ஜியோ புதிய அறிவிப்பு மூலம் ஏற்கனவே வழங்கி வந்த இலவச சேவைகள் அனைத்தையும் மார்ச் 31, 2017 வரை நீட்டித்திருக்கிறது. முன்னதாக ஜியோ இலவச சேவைகள் டிசம்பர் 31, 2016 வரை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News