செய்திகள்

ஐ.எஸ். ஆதரவாளர்கள் 15 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

Published On 2016-12-02 15:30 GMT   |   Update On 2016-12-02 15:31 GMT
நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 15 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய இளைஞர்களுக்கு நிதிஉதவி அளித்து, ஐ.எஸ். இயக்கத்தில் சேர்க்க சதித்திட்டம் தீட்டியதாக அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்தது. அவர்களது ஜாமீன் மனுக்களை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, அவர்கள் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், தங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததையும், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படாததையும் கவனிக்க விசாரணை நீதிமன்றம் தவறி விட்டதாக அவர்கள் கூறி இருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் கீதா மிட்டல், அனு மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. ஜாமீன் கேட்க சட்டரீதியாக அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

Similar News