செய்திகள்

18 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராட்டம்: உலக சுகாதார நிறுவனம்

Published On 2016-11-30 12:10 GMT   |   Update On 2016-11-30 12:10 GMT
18 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் உயிருக்குப் போராடி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா:

ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 18 மில்லியன் மக்கள் ரெட்ரோவைரல் தடுப்பு மருந்து மூலம் எயிட்ஸ் நோயை எதிர்த்துப் போராடி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "உலகம் முழுவதும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பாதிபேர் தாங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலேயே உள்ளனர். இதனால் இவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை முறைகளை பெறாமலே போகின்றனர்.
 
தங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதை அறிந்த மக்களில் 80% பேர் அதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

ஹெச்ஐவி தொற்று இருப்பதை வீட்டில் வைத்தே அறிவதற்கான சுய பரிசோதனை கருவிகளை உலக நாடுகளின் அரசுகள் உருவாக்கி, அவை எளிதாகவும், மலிவாகவும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கிரெட் சென் கேட்டுக் கொண்டுள்ளார்.

2005 தொடங்கி 2015-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் உலகளவில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12%-ல் இருந்து 60% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News