செய்திகள்

இந்தியாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 67 பேர் கைது - ராஜ்நாத் சிங்

Published On 2016-11-25 18:55 GMT   |   Update On 2016-11-25 18:55 GMT
இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநில டி.ஜி.பி.க்களின் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஐதராபாத்:

மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களின் 3 நாள் மாநாடு தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் மாலையில் தொடங்கியது. உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஊடுருவல், பிரிவினைவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாட்டை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ரூ 500 ,1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் பயங்கரவாதிகள் முடங்கி போயுள்ளனர். நக்சலைட்டுகள் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை மாற்ற முயற்சி செய்கின்றனர். நாம் அதனை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News