செய்திகள்

ஆசாராம் பாபுவை ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2016-10-24 09:28 GMT   |   Update On 2016-10-24 09:28 GMT
கற்பழிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல சாமியார் ஆசாராம் பாபுவை ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் மைனர் பெண்ணை கற்பழித்தது, குஜராத் மாநிலத்தில் இரு சிறுமிகளை கற்பழித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல சாமியாரான ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளி மாநிலங்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியாக தன்னை ஜாமினில் விடுவிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் ஆசாராம் பாபுவின் சார்பில் அவரது வக்கீல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி, என்.வி.ரமன்னா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

ஆசாராம் பாபுவை ஜாமினில் மறுத்துவிட்ட நீதிபதிகள் ஜோத்பூர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற அனுமதி அளித்து, இம்மனு மீதான மறுவிசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Similar News