செய்திகள்

ஜே.என்.யு மாணவர் மாயமான விவகாரம்: ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2016-10-23 10:56 GMT   |   Update On 2016-10-23 10:56 GMT
ஜே.என்.யு மாணவர் நஜீப் அகமது மாயமான விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்த சனிக்கிழமை மாயமானார். அவரை முன்தினம் இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவரை கண்டுபிடிக்கக்கோரி கடந்த 8 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் ராஜ்நாத் சிங் இல்லத்தின் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



முன்னதாக, உள்துறை அமைச்சக அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News