செய்திகள்

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது: ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்

Published On 2016-10-22 06:53 GMT   |   Update On 2016-10-22 06:53 GMT
காஷ்மீரில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்து எந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

ஜம்மு:

இந்தியா கடந்த மாதம் நடத்திய “சர்ஜிக்கல் ஆபரே‌ஷன்” தாக்குதல் நடவடிக்கையால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

அந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்ஷ்-இ- முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய மூன்று தீவிரவாத அமைப்புகளும் ஒருங்கிணைந்துள்ளன.

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியுள்ள அந்த தீவிரவாத அமைப்புகள், தற்கொலை படைகள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து அந்த சதி திட்டத்தை முறியடிக்க இந்தியா பல்வேறு ஏற்பாடுகளை எடுத்து வருகிறது.

முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காஷ்மீர் எல்லை முழுவதும் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களிடம் பிடிபட்டனர். அந்த இரு தீவிரவாதிகளும் ஜெய்ஷ்- இ- முகம்மது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அவர்கள் இருவரையும் சோதனையிட்டபோது எந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருப்பது தெரியவந்தது. அவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

முக்கிய நகரம் ஒன்றில் மிகப்பெரும் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி அவர்கள் ஆயுதங்களுடன் ஊடுருவி இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்படடது. இந்திய ராணுவ நிலைகளின் வரைடங்களும் அவர்களிடம் இருந்தது.

சரியான நேரத்தில் 2 தீவிரவாதிகளும் பிடிபட்டதால் மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.

Similar News