செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ரியாசியில் சாலை விபத்தில் 22 பேர் பலி - 30 பேர் காயம்: பிரதமர் மோடி இரங்கல்

Published On 2016-10-20 17:20 GMT   |   Update On 2016-10-20 17:20 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸ் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பலியானர்கள் 30 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸ் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பலியானர்கள் 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் துரதிருஷ்டவசமாக விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Similar News