செய்திகள்

பா.ஜ.க. மந்திய மந்திரி சுப்ரியோ மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் கண்டனம்

Published On 2016-10-20 10:17 GMT   |   Update On 2016-10-20 10:18 GMT
மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க. மந்திய மந்திரி பாபுல் சுப்ரியோவின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் நகரில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மந்திரி பாபுல் சுப்ரியோ  கார் மீது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவரது கார் முற்றிலும் சேதம் அடைந்தது. அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தம்மை தாக்கியதாக பாபுல் சுப்ரியோ குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. மந்திரி மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில், “ஒரு அரசியல் கட்சி கருத்து ரீதியாக தான் போராட வேண்டும். வலிமையான ஆயுதங்களை கொண்டு வன்முறையில் ஈடுபடக்கூடாது. இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகள் வன்முறையை ஆதரிக்கின்றன” என்றார்.

Similar News