செய்திகள்

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: பிரதமர் மோடி வீட்டில் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2016-10-06 05:54 GMT   |   Update On 2016-10-06 05:54 GMT
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஊடுருவினால் அதை முறியடிப்பது எப்படி என்று பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினார்கள்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், மனோகர் பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அஜித் தோவால் எல்லையில் தீவிரவாதிகள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வித மாக மீண்டும் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ் தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

ராணுவ நிலைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மையங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய தலைவர்களை குறிவைத்தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது என்றார்.

அவரது ஆலோசனைப்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மற்றும் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பை 2 மடங்கு அதிகரிக்க மந்திரி சபையில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், பிரதமர் வீடு ஆகிய இடங்களில் தலா 20 கமாண்டோ வீரர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டனர்.

பிரதமர் மோடி வீட்டுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஊடுருவினால் அதை முறியடிப்பது எப்படி என்று பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினார்கள். இந்த ஒத்திகையில் பிரதமர் மோடியும். பங்கேற்றார். தீவிரவாதிக் தாக்கினால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்று அவருக்கு விளக்கி கூறி கமாண்டோ வீரர்கள் ஒத்திகை நடத்தினர்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரின் இல்லங்களிலும் கூடுதல் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்..

Similar News