செய்திகள்

நேதாஜி தொடர்பான மேலும் 25 ஆவணங்கள் மத்திய அரசு இணையதளத்தில் வெளியீடு

Published On 2016-09-30 13:18 GMT   |   Update On 2016-09-30 13:19 GMT
விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய மேலும் 25 ஆவணங்கள், மத்திய அரசின் கலாச்சரத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ஆவணங்களை மத்திய அரசு கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

ஜனவரி மாதம் அவரது பிறந்த தினத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் மார்ச் மாதம் சில ஆவணங்களும், ஏப்ரல் மாதம் சில ஆவணங்களும் என தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்த ஆவணங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், நேதாஜி தொடர்புடைய மேலும் 25 ஆவணங்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கலாச்சரத்துறை இணையதளத்தில் இந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு வெளியிட்டுள்ள நேதாஜி குறித்த 8-வது ஆவண தொகுப்பு இது ஆகும். முன்னாதாக கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி 7-வது ஆவண தொகுப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News