செய்திகள்

உரி தாக்குதலில் பலியான வீரர்கள் குடும்பங்களுக்கு உதவ கச்சேரியில் பணமழை பொழிந்த மக்கள்

Published On 2016-09-30 10:55 GMT   |   Update On 2016-09-30 10:55 GMT
உரி தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் கச்சேரியில் பொதுமக்கள் தாராளமாக பணத்தை வாரி இறைத்தனர்,
சூரத்:

காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் நிதி உதவிகளை அறிவித்துள்ளன.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சவானி குரூப் நிறுவனம் உரி தாக்குதலில் பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் தங்கிப்படிக்க விடுதி மற்றும் இதர செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே சூரத்தில் ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு நிதி திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட தொழில் அதிபர்களும், பிரமுகர்களும், பொதுமக்களும் மேடையில் ஏறி பணத்தை கொட்டினார்கள். சிறுவர்களும் ஆர்வத்துடன் பணம் வழங்கினார்கள்.

இதனால் மேடையில் மலைபோல் பணம் குவிந்தது. இந்த நிதி மாநில அரசு மூலம் ராணுவத்தினரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Similar News