செய்திகள்

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்: பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2016-09-28 08:33 GMT   |   Update On 2016-09-28 08:33 GMT
நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
புது டெல்லி:

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் ’மெலடி குயின்’  உள்ளிட்ட பல்வேறு அடைமொழிகளால் போற்றப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று தன்னுடைய 87-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் லதா மங்கேஷ்கருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

"லதா மங்கேஷ்கருக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு உலகின் ஆறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News